Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா வருகிற 22-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது

October 14, 2025

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாமா – அண்ணாமலை கேள்வி

October 14, 2025

பீகார் பாஜக 71 இடங்ளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

October 14, 2025
Facebook X (Twitter) Instagram
Wednesday, October 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222 Mins Read1,007 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சைவ சமய பஞ்ச மூர்த்திகளில் சண்டிகேஸ்வரரும் ஒருவர். வழக்கமாக சிவன் கோவில்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் இடத்திற்கு இடது புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும்.

சிவாலயங்களில் பஞ்ச மூர்த்தி உலாவின் புறப்பாடின் பொழுது சண்டிகேஸ்வரரும் இறுதியாக உலா வருவார். சண்டிகேஸ்வரர் என்பது சிவபெருமான் அளிக்கும் ஒரு பதவியின் பெயர்.

 

சண்டிகேஸ்வரர் வரலாறு

பெரியாபுராணத்தின் படி சண்டிகேஸ்வரரின் இயற்பெயர் விசாரசர்மன். இவர் சிறு வயதாக இருந்த போது மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். பணிக்கு இடையே மணலால் சிவலிங்கம் செய்து ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவரின் தவ வலிமையாலும், தன்னுடைய மேய்ப்பான் மீது கொண்டிருந்த அதீத அன்பினாலும், விசாரசர்மன் மேய்த்த மாடுகள் அவர் உருவாக்கிய மணல் லிங்கத்தின் மீது தானாக பாலை சுரந்து அபிஷேகம் செய்தன.

இந்த நிகழ்வு தினசரி தொடர்ந்தது. இந்த செய்தி மாட்டின் உரிமையாளரை எட்டியது. அவர் விசாரசர்மனின் தந்தையான எச்சதத்தனிடம் , “உங்கள் மகன் மணல் லிங்கம் அமைத்து தியானிக்கிறான். அதற்கு என் பசுக்களை கொண்டு அபிஷேகம் செய்ய வைக்கிறான். இதனை கண்டியுங்கள்”, என புகார் அளித்தார் .

இதையும் படிக்க :  விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு - விநாயகர் சிலைகள் கண்காட்சி !

இதனை ஆராய விரும்பிய எச்சதத்தன் ஒரு நாள் மறைதிருந்து கண்காணித்தார். அப்போது மணல் லிங்கத்தின் முன் விசாரசர்மன் ஆழ்ந்த தியானத்தில் இருக்க, மாடுகள் தாமாகவே லிங்கத்தின் மீது பால் சுரந்து அபிஷேகம் நிகழ்த்தின. இதனை கண்டு கடும் சினம் கொண்ட தத்தன் அந்த மணல் லிங்கத்தை காலால் தகர்த்தார்.

இதனால் தவம் கலைந்து எழுந்த விசாரசர்மன் ஒரு குச்சியால் தந்தையின் காலை தாக்கினார். அந்த குச்சி கோடாரியாக மாறி அவர் தந்தையின் காலை கடுமையாக தாக்கியது.

அப்போது தோன்றிய சிவபெருமான், விசாரசர்மனின் பக்தியை மெச்சி அவர் தந்தையின் கால்களை சீராக்கினார். விசாரசர்மனுக்கு வரமொன்றை அளித்தார்.

அதாவது அன்று முதல் அவர் சண்டிகேஸ்வரர் என்றும், தனக்கு நிகழ்ந்த பூஜைகளும் மரியாதையும் இனி அவருக்கும் கிடைக்கும் எனவும் அருளினார்.

இதையும் படிக்க :  புரட்டாசி மாதம் : சபரிமலை கோவில் நடை திறப்பு!

இதனை அடுத்து சிவ கணங்களை, சிவன் சொத்துக்களை காவல் காத்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் சண்டிகேஸ்வரர்.

சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள் எல்லாம் சண்டிகேஸ்வரர் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள்.

எனவே  பக்தர்கள் இவரிடம் கைகளை உதறி, தாம் எந்த சிவ சொத்தையும் எடுத்து செல்லவில்லை என கூற வேண்டும்.

சண்டிகேஸ்வரர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பதால் இவர் சன்னதிக்கு முன்பு நின்று கை தட்டுவது கூடாது கை தட்டினால் தியானம் கலைந்து விடும் என்பார்கள்.

பிரசாதத்தை எடுத்து செல்லும் அனுமதியை அவரிடம் கேட்டு எடுத்து செல்ல வேண்டும்.

ஆகமங்களின் படி இவருக்கு வாகனம் காளை . சிவபெருமானை போலவே இவரும் கையில் மழு ஏந்தி இருப்பார். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவராகவும் இருக்கிறார்.

சிவ பெருமானை வணங்கும் பொழுது சண்டிகேஸ்வரரையும் சேர்த்து வணங்கினால் தான் முழு பலன் கிடைக்கும்.

sandikeswarar shaivism spirituality
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமாணவர்களுக்கு எச்சரிக்கை – தேர்வுத்துறை அதிரடி! பல கட்டுப்பாடுகளை அறிவித்தது.
Next Article கூகுள் வகுப்பறை பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்

Related Posts

Editor's Picks

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா வருகிற 22-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது

October 14, 2025
Editor's Picks

தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் கீழே விழாது பள்ளிக்கல்வித்துறை விளம்பரத்தில் தவறு

October 14, 2025
Editor's Picks

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து மூன்றாவது நீதிபதி உத்தரவு

October 10, 2025
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,888 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,846 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,739 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,888 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,846 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,739 Views
Our Picks

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா வருகிற 22-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது

October 14, 2025

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாமா – அண்ணாமலை கேள்வி

October 14, 2025

பீகார் பாஜக 71 இடங்ளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

October 14, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.