இன்ஸ்டாகிராமில் வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கியது இன்ஸ்டாகிராம் நிறுவனம்.
இன்ஸ்டா
இன்ஸ்டாகிராம் 2010 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. ஒளிப்படங்கள், தகவல்கள், வியபாரம், குறுஞ்செய்தி ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிடலாம் பகிர்ந்துகொள்ளலாம். இது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருந்ததால் மக்கள் அனைவரும் இதனை ஆர்வத்தோடு பயன்படுத்த தொடங்கினர்.
எந்த அளவுக்கு தொழில் நுட்பம் வளர்கிறதோ அந்த அளவுக்கு ஆபத்தும் கூடவே வளரும் என்பதற்கு சான்றாக இன்ஸ்டாகிராமில் பல குற்ற சம்பவங்கள் அரங்கேற தொடங்கின. முக்கியமாக இந்த குற்ற சம்பவங்களில் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்ட்டுள்ளனர்.
மதுரை டு சிவகங்கை
கடந்த ஆகஸ்ட் மாதம் சிவகங்கை அல்லி நகரம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ் குமார் என்பவருக்கும் மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கத்தின் அடுத்த நகர்வு காதலாக மாறியுள்ளது. ஒருநாள் சந்தோஷ்குமார் மாணவியை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி அதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
பண மோசடி
ஒரு நிலைக்கு பிறகு அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவேன் என மிரட்டி மூன்று தவணையாக மொத்தம் 50,000 ரூபாய் பணத்தை மாணவியிடம் ஏமாற்றி வாங்கியுள்ளார். மேற்கொண்டு மாணவி பணம் தர மறுத்ததால் தனது நண்பர் ராகுல் மூலமாக சந்தோஷ் குமாரும் மாணவியும் நெருக்கமாக இருந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
சிறையில் முடிந்த காதல்
இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய வீடியோவை வைத்து மாணவியை மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மீண்டும், வீடியோவை நீக்கம் செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த வீடியோ வைரலானதை கண்ட மாணவி பிரச்சனையை பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் போன் நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
வயது வரம்பு
ஒன்று , இரண்டு அல்ல இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்த குற்றங்களை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் சரியான வயது வரம்பை உறுதி செய்வதை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.