இந்தியா

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிமூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.

ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதிலிருந்து மீண்ட13 வயது தலித் சிறுமி, உத்தரபிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலைய அதிகாரியால் (SHO) மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை குழந்தைகள் உதவி மையத்தின் உறுப்பினர்களிடம் கூறியபோது, ​​சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது, SHO மற்றும் சிறுமியின் அத்தை உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் தாயார் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரைத் தொடர்ந்து SHO சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, ஏப்ரல் 22 அன்று தனது மகளை கடத்தி மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் போபாலில் மூன்று நாட்கள் தங்கியிருந்ததாகவும், அப்போது எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 26 ஆம் தேதி அந்த நபர்கள் சிறுமியை காவல் நிலையத்தில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து போலீசார் சிறுமியை அவரது அத்தையிடம் ஒப்படைத்தனர். ஒரு நாள் கழித்து, போலீசார் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், மாலையில்,சிறுமியின் அத்தை அவரை SHO அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அச்சிறுமி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பல தரப்பினரிடம் பெரும் சர்ச்சையை தூண்டியது. எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தையும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, சட்டம் ஒழுங்கில் தேவையான சீர்திருத்தங்கள் புல்டோசர்களின் சத்தத்தில் நசுக்கப்படுகின்றன என்று டீவீட் செய்துள்ளார்.

மேலும், யோகி ஆதித்யநாத் அரசைக் குறிவைத்து இந்தியில் ட்வீட் செய்த பிரியங்கா காந்தி, ‘காவல் நிலையங்களே பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லை எனில், அவர்கள் புகார் அளிக்க எங்கு செல்வார்கள்?’ என்று கேட்டார். ‘காவல் நிலையங்களில் பெண்களை பணியமர்த்துவதை அதிகரிக்கவும், காவல் நிலையங்களை பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும்’ என்றும் சாடியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சென்று அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்து உள்ளார்.

Related posts