கன்னியாகுமரியில், சுமார் 8 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்ற நபரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.
குமரியில் ரேஷன் அரிசி கடத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை சந்திப்பில் களியக்காவிளை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியின் மீது சந்தேகம் அடைந்த காவலர்கள், அந்த வாகனத்தை சோதனையிட்டனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியிருந்து ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கொண்டு செல்லும் வழி காவல்துறை கைப்பற்றியுள்ளது. மினிலாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (26) என்பது தெரியவந்தது. அப்போது அங்கு வந்த காவல் துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் களியக்காவிளை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டதில் ரேசன் அரிசி கடத்தலை தடுத்த காவல் துறைனரை பாராட்டினார்.
சில சம்பவங்கள்
இதைபோல் கடந்த காலத்தில் தமிழகமெங்கும் கடத்தலில் நடந்த சம்பவங்கள்,
ஒரு நாள் அதிகாலையில் களியக்காவிளை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் சிந்த மணி மற்ற காவலர்களும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு வந்த ஆட்டோவை மறித்தபோது, ஆட்டோ நிறுத்தாமல் சென்றுயுள்ளது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் விரட்டி சென்று ஆட்டோவை போலீஸ்சார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் களியக்காவிளை அருகே உள்ள கொல்ங்குடியை சேர்ந்த விஷ்ணு (39) என்பவர். ஆட்டோவை ஆய்வு செய்தபோது சுமார் 1000 கிலோ ரேசன் அரிசியை கேரளாவிற்கு கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் அதேபகுதியை சேர்ந்த அஜி ,விஜின் இருவரும் தாக்கப்பட்டனர்.
திருநெல்வேலி முதியவர் கொலை
கடந்த ஏப்ரல் மாதத்தில் திருநெல்வேலி, மேலப்பாளையம் அருகே 63 வயது முதியவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பையை ஏற்படுத்தியிருந்தது .நியாய விலை கடையில் பணியற்றிய அவர் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் நண்பர்கள் உதவியுடன் வெங்கடாஜலபதியை கொலை செய்துள்ளார்.
அதிரடி உத்தரவு
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க களியக்காவிளை காவல் துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் படி தனிபடையமைத்து சோதனையை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.