கல்விதமிழ்நாடு

மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்புக்கு டாக்டர் ஏ.ரத்தினவேல் – தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு (hypocratic oath) பதிலாக சரக் ஷபத் (charak sabath) எடுத்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் நீக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ஏ.ரத்தினவேல் புதன்கிழமை மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தன் தவறுக்காக டாக்டர் ரத்தினவேல் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும், வியாழக்கிழமை மீண்டும் கல்லூரியில் அவர் பணியைத் தொடர்வார் என்றும் சுப்பிரமணியன் கூறினார்.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மாநில அரசு பின்பற்றும் மரபுகளுக்கு எதிராக, இரண்டு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தொன்மையான ஹிப்போகரட்டிக் உறுதிமொழிக்கு பதிலாக சரக் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மாநிலத்தில் உள்ள மற்ற மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்களும் இதே உறுதிமொழியை எடுத்தனர்‌.

அதிகாரிகள் இதனைத் தொடர்ந்து இந்த அனைத்து நிர்வாகங்களையும் எச்சரித்தனர் மற்றும் அரசு ஞாயிற்றுக்கிழமை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது, கல்லூரி நிர்வாகங்கள் ஹிப்போக்ரடிக் சத்தியத்தை பின்பற்றுகின்றன, சரக் சத்தியத்தை அல்ல என்று அச்சுற்றறிக்கை சுட்டிக்காட்டியது.

நேற்று, சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவிட் -19 தொற்றுநோய் பரவலின் போது டாக்டர் ரத்தினவேலின் பங்களிப்பை பற்றி கேள்வி பட்டதாகவும், அவர் வருத்தம் தெரிவித்ததால் அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் கூறியதாகக் கூறினார். ‘முதல்வர் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் கூறினார்.

மேலும் மூன்று கல்லூரிகளின் டீன்கள் மன்னிப்பு கேட்டதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம் என்றார் சுப்ரமணியன்.

சரக் ஷபத் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது எனவே தமிழகத்தில் அந்த உறுதிமொழியை பின்பற்ற இயலாது‌ என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related posts