அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கடிதம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் செயல்படுவார் என எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன்னர் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் அதிமுகவின் வங்கி வரவு செலவுகளை பராமரிப்பது, காசோலைகளில் கையெழுத்திடும் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். தற்போது பொறுப்புகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு மாற்றப்பட்டுள்ளதால் இது குறித்து கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

