சென்னையில் பல பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்காத நிலையில், தமிழக அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும், நூக்கம்பாளையம் மேம்பாலப்பகுதி, அரசன் கழனி ஏரி உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தார். தொடர்ந்து மதுரப்பாக்கம் ஓடை, தெற்கு டிஎல்எப் இடங்களில் நடக்கும் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் துறை ரீதியான அதிகாரிகள் உடனிருந்தன.

