சென்னையில் நேற்றிரவு திமுக பிரமுகரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக பிரமுகர் கொலை
சென்னையில் நேற்றிரவு திமுக பிரமுகரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வெட்டிக் கொலை செய்த கொலை செய்யப்பட்ட 38 வயதான மதன், உள்ளாட்சித் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு தான் திமுகவில் இணைந்துள்ளார். அவர் தனது நண்பருடன் நேற்றிரவு பல்லவன் சாலையில் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
சரியாக இரவு 10 மணியளவில், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பைக்கில் வந்த இருவர் நபர்கள், மதனை வழிமறித்துள்ளனர். உடனடியாக அங்கிருந்து மதன் ஓட முயற்சி் செய்துள்ளார். அப்போது அந்த இரண்டு நபரும் மதன் மற்றும் அவரது நண்பர்களை விரட்டிச்சென்று அரிவாளால் சரிமாரியாக மதனை
வெட்டி கொலை செய்துள்ளார். அப்போது மதன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பின்னர் கொலை செய்த இரண்டு நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து செய்தி அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்துள்ளனர்.இறந்து கிடந்த மதனின் உடலை மீட்டு பேரத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ககுற்றவாளிகளை தேடிவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. திமுக பிரமுகரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

