சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ஸ்கேனர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன ஸ்கேனர் கருவி
இது குறித்த தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிநவீன முறையில் பைகளை ‘ஸ்கேன்’ செய்யும் கருவியை சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 45 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டிருக்கும் இந்த அதிநவீன ‘ஸ்கேனர்கள்’ மூலம் பொருட்களின் இருவேறு பக்கங்களை ஆய்வு வகையில் செயல்படும். மேலும், இந்த ‘ஸ்கேனரின் அறிமுகத்தால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் முடியும், அந்த வகையில் ஒரு மணி நேரத்தில் 300 முதல் 500 பைகளை சோதனை செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ‘ஸ்கேனர்களை’ விரைவில் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது’ என தெற்கு ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

