ஜனாதிபதி தேர்தலில் எப்படி ஓட்டு அளிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்களுக்கு பயிற்சி அளிக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது.
எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இது குறித்து, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், ‘முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெறும். அதில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுச் சீட்டு முறையில் எப்படி ஓட்டு அளிக்க வேண்டும் என்ற அனுபவம், மூத்த எம்.எல்.ஏக்களுக்கு இருக்கும். ஆனால், முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு அளிப்பது புதிய அனுபவம் என்பதால், அவர்களுக்கு அக்கூட்டத்தில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படயுள்ளது என தந்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

