தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள்
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 510 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 498 இடங்களுக்கும், நகர்ப்புறங்களில் 12 கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் திமுக, பாஜக, நாதக, அதிமுக கட்சிகளின் போட்டியாளர்கள் பங்கேற்றனர். முக்கியமாக அதிமுகவில் வேட்பாளர்களுக்கான ஏ மற்றும் பி படிவம் அதிமுக தலைமையால் வழங்காததால், பலர் சுயேச்சையாக போட்டியிட்டனர். உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மேலும், தேர்தல் முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்துலோம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

