அறிவியல்

Halow Wi-Fi பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்

மொபைல் இன்டர்நெட்டில் 2G சேவையில் ஆரம்பித்து இன்று 5G க்கு முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் Wi-Fi தொழில்நுட்பம் மட்டும் ஆரம்பித்த நிலையிலேயே தான் இருக்கிறது.

சில மாறுபாடுகளை கண்டிருந்தாலும் கூட நாம் தற்போது பயன்படுத்திவரும் Wi-Fi தொழில்நுட்பம் ஆனது அதிகபட்சமாக 150 அடி அல்லது 46 மீட்டர் வரைக்கும் தான் வேலை செய்யும்.

தற்போது முழு வீட்டையும் ஸ்மார்ட் ஆக்கும் தொழில்நுட்பங்கள் (Internet of Things) வந்தபிறகு Wi-Fi யின் வேலை செய்திடும் தொலைவு என்பது சிக்கலானதாக இருக்கிறது. இதற்க்கு தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டது தான் Halow Wi-Fi.

நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கும் Wi-Fi ஆனது 2.4GHz முதல் 5GHz வரைக்குமான ரேடியோ அலைவரிசையை பயன்படுத்தி செயல்படுகிறது. அதிக அதிர்வெண் கொண்ட அலைவரிசையை பயன்படுத்துவதால் அதிக அளவிலான தகவலை பரிமாறிக்கொள்ள முடியும். இதனால் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க முடியும்.

ஆனால் Halow Wi-Fi யில் sub-1 GHz ரேடியோ அலைவரிசையை பயன்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, இதனைக்கொண்டு 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொபைல், சிசிடிவி உள்ளிட்ட கருவிகளோடு இணைத்து இன்டர்நெட் சேவையை வழங்க முடியும்.

குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகளை பயன்படுத்துவதால் இன்டர்நெட் வேகம் குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரு ஸ்மார்ட் ஹோமுக்கு அதுவே போதுமானதாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

அதேபோல நாம் தற்போது பயன்படுத்தும் Wi-Fi கருவிகளுக்கு தேவைப்படும் ஆற்றலை விடவும் வெகு குறைவான ஆற்றலே இதற்கு தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Halow Wi-Fi செயல்பாட்டுக்கு இன்னும் முழுமையாக வரவில்லை. ஆனால் இதற்கான முயற்சிகள் வெகுவாக நடைபெற்று வருகின்றன.

அதிக தொலைவில் உள்ள ஸ்மார்ட் கருவிகளை Halow Wi-Fi மூலம் இணைக்க முடியும். ஸ்மார்ட் ஹோமில் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கும். ஸ்மார்ட் தொழிற்சாலை, ஸ்மார்ட் அலுவலகம் போன்றவற்றை நிர்மாணிக்கும் போது பேருதவியாக இது இருக்கும்.

Related posts