உலகம்

நான் இன்னும் சாகல ! உடலை அசைத்து உயிர் தப்பிய நபர்

சீனாவில் , இறந்து விட்டதாக நினைத்து சடலத்தை எரிக்க செல்லும் போது இறந்தவரின் உடல் அசைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரியாமல் உயிர் தப்பினார்

பிணவறை, இறுதி சடங்கு வரை சென்று உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு நபர் இறந்துவிட்டதாக எண்ணி சவக்கிடங்கு பணியாளர்கள் உடலை எரிப்பதற்காக கொண்டு சென்றுள்ளனர். அப்போது சவப்பைக்குள் இருந்த உடல் அசைவதை கண்டு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அமரர் ஊர்தியில் இருந்து உடலை வெளியே இறக்கி பையை திறந்து பார்த்ததில் உள்ளே இருக்கும் நபர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. பணியாளர் ஒருவர் மீண்டும் பையை மூட மற்றொரு பணியாளர் பையை மூட வேண்டாம் என தடுத்து அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

வீடியோ பதிவு

இந்த சம்பவத்தை அங்கு இருந்த நபர் வீடியோவாக பதிவு செய்தார். மேலும், ‘இதுபோன்ற அலட்சியமான ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்’ என கூறி வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இது தொடர்பான மருத்துவர் , பணியாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா சம்பவம்

2019 ஆம் ஆண்டு ஒடிசாவில் இதேபோல ஒரு நபர் இறந்துவிட்டார் என உறவினர்கள் உடல் தகனத்திற்கு உடலை கொண்டு சென்றனர். ஆனார் திடீரென இறந்தவர் உயிருடன் எழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணியாளர்களின் அலட்சியம்

ஆனால் இந்த அலட்சியமோ மருத்துவமனை ஊழியர்களிடம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் சக பொதுமக்களிடையே அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதாக வீடியோ பதிவிட்ட நபர் கூறியுள்ளார்.

Related posts