தமிழ்நாடு

தொடங்கியது 10ம் வகுப்பு பொது தேர்வு – மாணாக்கர்கள் தேர்வு எழுத ஆர்வம்.

தமிழகம், புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது மாணாக்கர்கள் தேர்வு எழுத ஆர்வம்.

விவரம்

இன்று சுமார் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணாக்கர்கள் தேர்வு எழுதுகின்றனர். தனி தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 தேர்வில் பங்கேற்கின்றனர். மொத்தம் 3,936 தேர்வு மையங்கள், 51 ஆயிரத்து 710 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், மாநில முழுவதும் 308 கேள்வித்தாள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதலாக மொழிப்பாடம் எழுதி வருகின்றனர்.

கட்டுப்பாடுகள்

இன்று காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். மே 30ம் தேதி வரை தேர்வு நடைபெறும். மாணாக்கர்கள் முகக்கவசம் அணிந்து வர கட்டாயம் இல்லை, உடல் நிலை பாதிப்பு உள்ளவர்கள் அணிந்து கொள்ளலாம். தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் செல்போனை மையத்துக்குள் எடுத்துவரகூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்

தேர்வு எழுதும் மாணாக்கர்கள் அனுமதி சீட்டுடன் காலை 9.00 மணிக்கு பள்ளிக்குள்
வந்தால் போதும். இதனை தொடர்ந்து, 10 மணிக்கு தேர்வு அறைக்குள் சென்று 10.10 வரை வினாத்தாளை படித்து பார்க்க வேண்டும். தேர்வர்கள் விவரங்களை சரி பார்த்து பின்னர் தேர்வு தொடங்கும். 1.10 மணிக்கு வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும். லாங் பெல் அடிக்கும்போது தேர்வுத்தாளை ஆசிரியர் பெற்று கொள்ளவேண்டும்.

நடவடிக்கைகள்

ஆசிரியரோ, தேர்வர்களோ, செல்போனோ, தகவல் சாதனைகளோ வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆள் மாறாட்டம் செய்தல் வாழ்நாள் முழுக்க தேர்வு எழுத்த முடியாது என எச்சரித்துள்ளது. வினாத்தாள்கள் பாதுகாப்பு மையத்தில் வைத்து 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர்களால் பாதுகாக்கப்படும். மாணாக்கர்கள் காப்பியடித்தால், அடுத்த ஓராண்டு தேர்வு எழுத தடைவிதிக்கப்படும். மேலும் காப்பியடித்தலை தடுக்க ஆயிரம் பறக்கும்படை நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts