சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் கமல் ஹாசனின் புகைப்படம்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து கமலின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

வைரல் புகைப்படம்

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்கா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமலுக்கு மேக்கப் போடும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Related posts