ஆன்மீகம்தமிழ்நாடு

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா!

கும்பாபிஷேக விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் வர்ணம் பூசும் பணிகள் தொடங்கியுள்ளது.

பழனி முருகன் கோவில் 

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் இறுதியாக கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையடுத்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கும்பாபிஷேக பணிகள் நிறுத்தப்பட்டது.

கும்பாபிஷேகம் 

இந்தநிலையில், கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது மீண்டும் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளது. அதன்பெயரில் மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு வருகிறது.

Related posts