இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல் நல குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரதாப் போத்தன் மறைவு
தமிழில் அழியாத கோலங்கள், இளமைக் கோலம், மூடுபனி போன்ற ஏராளமான படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். இவர் மீண்டும் ஒரு காதல் கதை, சீவலப்பேரி பாண்டி, வெற்றி விழா ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் பிரதாப் போத்தன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர்கள் பி.சி ஸ்ரீராம், ராஜூமேனன், நடிகர்கள் கருணாஸ், பிரபு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

