அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ், ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ், ஈபிஸ் இரு தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரு தினங்களாக வாதங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்றும் விசாரணை நடைபெற்றது, அப்போது போலீஸ் தரப்பில், தற்போது வரை அதிமுகவில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் அகற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மேலும், பிரச்னை ஏற்படலாம் என விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களை கேட்டபின்னர் நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

