சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,561 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் 2,726 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டம்
நாட்டின் 75வது சுதந்திர தின வரும் 15ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் இன்று திங்கட்கிழமை வரை 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும், பொது இடங்களில் மாக்கள் அதிகமாக கூடும்போது முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

