கோவையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல்.
விமானம் தரையிறக்கம்
பெங்களூருவில் இருந்து மேற்கு ஆப்ரிக்க நாடான மாலிக்கு 92 பயணிகளுடன் கோ.ஏர் விமானம் சென்றது. அப்போது, திடீர் என இன்ஜீனில் கோளாறு ஏற்பட்டதற்கான அலாரம் அடித்தது. இதனையடுத்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானத்தை பரிசோதனை செய்து பார்த்ததில், அலாரத்தின் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது தொடர்ந்து ஒலித்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

