அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் நிறுவனம் தனது விற்பனை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
விற்பனை நிறுத்தம்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்படாஸ் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதாகக் கூறி வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக அமெரிக்காவில் பல நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு நடந்து வந்தது. பல சட்டப் போராட்டங்களுக்குப்பின் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், ‘எங்களுடைய நிறுவனம் இனிமேல் குழந்தைகளுக்கான அனைத்து டால்கம் பவுடரையும் இனிமேல் சோளமாவு பவுடருக்கு மாற்றப் போகிறோம். நீண்ட காலத்துக்கு எது வளர்ச்சிக்குரியது என்று ஆராய்ந்து, மதிப்பீடு செய்து பொருட்களைத் தயாரிக்கவுள்ளோம். இன்று உலகளவில் அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்தோம், இதையடுத்து, 2023ம் ஆண்டு முதல் எங்கள் நிறுவனப் பவுடர் விற்பனை நிறுத்தப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

