கலவரத்துக்கு யார் காரணம் என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம்
கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை செய்துகொண்டதற்கு கள்ளக்குறிச்சியில் கலவரங்கள் வெடித்தது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே மாணவியின் உடலை மறு பிரதேச பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையில், ‘போராட்டம் நடத்த அனுமதி அளித்தது யார் என்று நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், கருப்பு சட்டை அணிந்து கலவரம் செய்தவர்களை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறை தங்களது பவரை காட்ட வேண்டும். இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

