சினிமாவெள்ளித்திரை

ஜி.வி.பிரகாஷ் படத்தின் டீசர் அறிவிப்பு !

டீசர் அறிவிப்பு

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது ‘கள்வன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் வெளியான இதன் மோஷன் போஸ்டர் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், ‘கள்வன்’ படத்தின் டீசர் நாளை மாலை 4.44 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts