படப்பிடிப்பு
அந்தே சுந்தராணிகி படத்தை தொடர்ந்து நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’ இதில் கீர்த்தி சுரேஷ், பூர்ணா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்தை இயக்க, ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், சந்தோஷ் நாரயணன் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ‘தசரா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக நடிகர் நானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
An Epic called #DASARA is done 🔥
It’s a wrap
This diamond will shine FOREVER ♥️ pic.twitter.com/2vfAoiSLiE— Nani (@NameisNani) January 12, 2023

