Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அழகுக்குறிப்புகள்»‘ஹேர் எக்ஸ்டென்ஷன்’-களில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் – அய்வில் அதிர்ச்சி தகவல்!

‘ஹேர் எக்ஸ்டென்ஷன்’-களில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் – அய்வில் அதிர்ச்சி தகவல்!

February 13, 20263 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நமக்கு ‘ஒட்டு முடி’ என்பது புதிய விஷயம் அல்ல. திருவிழாக்களில் மேடை நாடகக் கலைஞர்கள் பயன்படுத்துவதில் தொடங்கி, விசேஷ காலங்களில் பெண்கள் ஜடை நீளமாக காட்டப் பயன்படுத்தும் ‘சவுரி முடி’ வரை பல வடிவங்களில் இதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அன்றைய சவுரி முடிகளுக்கும் இன்றைய நவீன ‘ஹேர் எக்ஸ்டென்ஷன்’ (Hair Extension) முறைகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

குறிப்பாக, அழகு சாதனத் துறையில் இன்று ‘ஹேர் எக்ஸ்டென்ஷன்’ (Hair Extension) எனப்படும் செயற்கை மற்றும் இயற்கை தலைமுடி நீட்டிப்பு முறைகள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. மெலிதான கூந்தல் கொண்டவர்கள் அடர்த்தியாகக் காட்டவும், நீளம் அதிகம் இல்லாத கூந்தலை நீளமாக காட்டவும் இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.

இன்று இயற்கையான முடியுடன் பிணைக்கப்படும் இந்த ஒட்டு முடிகள், பார்ப்பதற்கு அசல் முடி போலவே காட்சியளிக்கின்றன. ஆனால், நம் அழகை மெருகூட்ட நாம் பயன்படுத்தும் இந்த பொருட்கள், நம் ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக அமையக்கூடும் என்பதைப் பலரும் உணர்வதில்லை. சமீபத்திய ஆய்வுகள், நாம் தலையில் பொருத்திக்கொள்ளும் இந்த முடிகளில் புற்றுநோய் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் கலந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.

வெறும் அழகிற்காகப் பயன்படுத்தப்படும் இவை, நாளடைவில் உடலின் ஹார்மோன் சமநிலையைச் சீர்குலைத்து, நீண்ட கால நோய்களுக்குக் காரணமாகின்றன. இது குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பலரும் இதன் பின்னணியில் உள்ள ஆபத்துகளை அறியாமலேயே பயன்படுத்தி வருகின்றனர் என்கிறது ஆய்வு.

தலைமுடி நீட்டிப்பு சாதனங்களில் உள்ள நச்சுயிரிகள்: அமெரிக்க வேதியியல் கழகத்தின் (American Chemical Society) இதழான ‘Environment & Health’இல் புதிய ஆய்வு வெளியிடப்பட்டது. இதில், சந்தையில் கிடைக்கக்கூடிய 43 வகையான தலைமுடி நீட்டிப்பு சாதனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதையும் படிக்க :  மாதவிடாய்க்கு முன் ஏற்படும் முகப்பருவால் அவதியா? வராமல் தடுக்கலாமா?

செயற்கை முடி, மனித முடி, கண் இமை முடி (Eyelash extensions) மற்றும் தாவர நாரினால் ஆன முடிகள் எனப் பல வகைகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், இத்தகைய சாதனங்களில் 900-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வேதிப்பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 169 வேதிப்பொருட்கள் எவை என்று துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தாலெட்டுகள் (Phthalates): இவை பிளாஸ்டிக் தன்மையை அதிகரிக்கப் பயன்படுகின்றன.
பூச்சிக்கொல்லிகள் (Pesticides): இயற்கை முடிகளைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
தீ தடுப்பான்கள் (Flame Retardants): முடி எளிதில் தீப்பற்றாமல் இருக்கச் சேர்க்கப்படுகின்றன.
ஆர்கனோடின் கலவைகள் (Organotin compounds): இவை நுண்கிருமிகள் வளராமல் தடுக்கப் பயன்படுகின்றன.
இந்த வேதிப்பொருட்களில் 12 வேதிப்பொருட்கள், கலிபோர்னியாவின் ‘Proposition 65’ பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் அல்லது இனப்பெருக்க மண்டலத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேதிப்பொருட்கள் உடலை எவ்வாறு பாதிக்கின்றன? முடி நீட்டிப்பு சாதனங்கள் நீண்ட காலம் உழைக்கவும், பளபளப்பாக இருக்கவும், பல்வேறு வண்ணங்கள் மற்றும் நீர்-எதிர்ப்பு தன்மையைப் பெறவும் வேதியியல் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும்போது பின்வரும் பாதிப்புகள் ஏற்படலாம்,

பலரும் இதைப் பயன்படுத்திய பிறகு தலையில் அரிப்பு, வீக்கம் அல்லது தோல் சிவந்து போதல் போன்ற புகார்களைத் தெரிவிக்கின்றனர். இந்த முடிகளை வெப்பப்படுத்தி ‘ஸ்டைல்’ (Heat styling) செய்யும் போதோ அல்லது குளிக்கும் போதோ, அதில் உள்ள வேதிப்பொருட்கள் ஆவியாக மாறி வெளியேறுகின்றன. இந்த வாயுக்களைச் சுவாசிப்பதால் கண், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படலாம்.

இதையும் படிக்க :  எந்த சருமத்திற்கு எந்தெந்த சோப்பு பயன்படுத்தவேண்டும் - விரிவான ஒரு கட்டுரை!

நீண்ட காலத்திற்கு இத்தகைய நச்சுப் புகையைச் சுவாசிப்பது கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இதில் உள்ள வேதிப்பொருட்கள் ஹார்மோன் சுரப்பிகளில் ஊடுருவி, உடல் எடை அதிகரிப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டிற்கு வழிவகுக்கின்றன.

யாருக்கு அதிகப் பாதிப்பு? இந்தச் சாதனங்கள் தற்போது அனைத்துத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டாலும், குறிப்பாகக் கருப்பினப் பெண்கள் மற்றும் கலாச்சார ரீதியாகத் தலைமுடி அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களிடம் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆய்வுத் தரவுகளின்படி, 70% க்கும் அதிகமான பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இத்தகைய நீட்டிப்பு சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், தயாரிப்பு நிறுவனங்கள் இந்த முடிகளில் என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை முழுமையாக லேபிள்களில் (Ingredient list) குறிப்பிடுவதில்லை. இதனால் நுகர்வோர் தாங்கள் எத்தகைய ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறியாமலேயே வாங்குகின்றனர்.

அபாயத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? முற்றிலும் பாதுகாப்பான ஹேர் எக்ஸ்டென்ஷன் என்று எதுவுமில்லை என்றாலும், விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் ஆபத்தைக் குறைக்கலாம் என்கிறது ஆய்வுகள்.

‘நச்சுத்தன்மையற்றது’ (Non-toxic) அல்லது ‘Toxin-free’ என்று சான்றளிக்கப்பட்ட பொருட்களைத் தேடி வாங்குங்கள்.
அதிகப்படியான வெப்பத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் அலங்காரங்களைத் தவிர்ப்பது நல்லது. இது வேதி வாயுக்கள் வெளியேறுவதைத் தடுக்கும்.
வெறும் விளம்பரங்களை நம்பாமல், அதில் உள்ள மூலப்பொருள் பட்டியலைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதாரிக் ரஹ்மானுடன் பிரதமர் மோடி பேச்சு – வங்கதேச தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து
Next Article தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேனாண்டாள் பிலிம்ஸ்

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
அழகுக்குறிப்புகள்

மின்னல் வேகத்தில் அழகா ரெடி ஆகணுமா? சட்டுனு மேக்கப்பை முடிக்க 10 சூப்பர் டிப்ஸ்!

March 26, 2026
ஃபிட்னஸ்

எடை குறைக்க வேண்டுமா? இந்தவொரு சீக்ரெட்டை தினமும் பின்பற்றுங்க!

March 23, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.