Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அழகுக்குறிப்புகள்»மின்னல் வேகத்தில் அழகா ரெடி ஆகணுமா? சட்டுனு மேக்கப்பை முடிக்க 10 சூப்பர் டிப்ஸ்!

மின்னல் வேகத்தில் அழகா ரெடி ஆகணுமா? சட்டுனு மேக்கப்பை முடிக்க 10 சூப்பர் டிப்ஸ்!

March 26, 20264 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளுக்கான வேலைகள் வரிசையாக நம் கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கும். குளித்து முடித்து, உடை உடுத்தி, கிளம்புவதற்குள் பாதி உயிர் போய்விடும். இதில் நிதானமாக அமர்ந்து மேக்கப் போடுவது என்பது பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்று.

ஆனாலும், அலுவலகத்திற்கோ அல்லது வெளியே செல்லும்போதோ முகம் சோர்வாகத் தெரிவதை யாருமே விரும்புவதில்லை. மேக்கப் போட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கு அதிக நேரம் எடுக்குமே என்ற தயக்கத்தில் பல பெண்கள் அதைத் தவிர்த்து விடுகிறார்கள். இன்னும் சிலரோ, அவசரத்தில் எதையாவது பூசி அது முகத்தின் இயற்கையான அழகையே மறைத்துவிடுவதும் உண்டு.

இதற்கெல்லாம் தீர்வு, மணிக்கணக்கில் கண்ணாடியின் முன் நிற்பது அல்ல, மிகக் குறைந்த நேரத்தில், சரியான நுணுக்கங்களைப் பயன்படுத்தி எப்படி நேர்த்தியாகத் தயாராவது என்பதைத் தெரிந்து கொள்வதுதான். இப்படியிருக்க, உங்கள் அழகை இன்னும் கொஞ்சம் மெருகேற்றவும், அதே சமயம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவும் சில எளிய மேக்கப் டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக.

அடர்த்தியாக பவுண்டேஷனை முகத்தில் தேய்த்து, அதை சரியாக பிளண்ட் (Blending) அதிக நேரம் எடுக்கும். அதற்கு பதிலாக ‘டின்டட் மாய்ஸ்சுரைசர்’ (Tinted Moisturiser) பயன்படுத்துவது ஒரு சூப்பர் வழி. இது உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதோடு, லேசான நிறத்தையும் அளிக்கும்.

இதனால் சருமம் இயற்கையான பொலிவுடன் இருக்கும். இதை விரல்களாலேயே மிக வேகமாக முகத்தில் தடவிவிடலாம் என்பதால், அவசரமாக கிளம்பும் நேரங்களில் இது உங்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.

பவுண்டேஷனுக்கு பிறகு கன்சீலர்

பொதுவாக பலரும் முதலில் கன்சீலர் போட்டுவிட்டு பிறகு பவுண்டேஷன் போடுவார்கள். ஆனால், முதலில் முகத்திற்கு ஒரு பேஸ் (Base) கொடுத்துவிட்டு, அதன் பிறகு தேவைப்படும் இடங்களில் மட்டும் கன்சீலர் வைப்பதுதான் சரியான முறை.

கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் அல்லது முகத்தில் உள்ள சிறு தழும்புகள் பவுண்டேஷன் போட்ட பிறகும் தெரிந்தால் மட்டும் கன்சீலரைப் பயன்படுத்துங்கள். இதனால் தேவையற்ற அதிகப்படியான மேக்கப்பை தவிர்க்கலாம் மற்றும் குறைவான நேரத்திலேயே முகம் பளிச்சென்று மாறும்.

இதையும் படிக்க :  வெயில் காலமா இருந்தாலும் ஒரு நாளைக்கு இவ்வளவு இளநீர்தான் குடிக்கனும்.. மீறினால் பிரச்சனைதான்..!

மல்டி-யூஸ் தயாரிப்புகளை தேர்ந்தெடுங்கள்

ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்குப் பதில், பல வேலைகளை செய்யும் ‘மல்டி-யூஸ்’ மேக்கப் பொருட்களை வாங்குங்கள். உதாரணமாக, ஒரு ‘லிப் அண்ட் சீக் டின்ட்’ (Lip and cheek tint) இருந்தால், அதை உதட்டிற்கும் பயன்படுத்தலாம், கன்னங்களுக்கும் பயன்படுத்தலாம். இது உங்கள் மேக்கப் பையில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, எதை தேடுவது என்ற குழப்பம் இல்லாமல் நிமிஷத்தில் மேக்கப்பை முடிக்க உதவும்.

மேக்கப் போட்ட சில மணி நேரங்களிலேயே முகம் டல்லாகி விடுகிறதா? அப்படியானால் மேக்கப் முடித்தவுடன் ஒருமுறை ‘செட்டிங் ஸ்ப்ரே’ (Setting spray) அடித்து கொள்ளுங்கள். இது நீங்கள் போட்ட மேக்கப்பை நீண்ட நேரம் கலையாமல் அப்படியே வைத்திருக்கும்.

மேலும், இது முகத்தில் உள்ள மேக்கப் அடுக்குகளை ஒன்றோடு ஒன்று நன்றாக இணைய செய்து, முகத்திற்கு ஒரு இயற்கையான தோற்றத்தைத் தரும். அடிக்கடி டச்-அப் செய்ய வேண்டிய அவசியத்தையும் இது குறைக்கும்.

மஸ்காராவுக்கு முன் லாஷ் கர்லர்

கண்களைப் பெரிதாகவும், அழகாகவும் காட்ட ஐலைனர் மட்டும் தான் வழி என்று நினைக்க வேண்டாம். மஸ்காரா போடுவதற்கு முன்னால் ‘ஐலாஷ் கர்லர்’ (Eyelash curler) கொண்டு இமைகளை லேசாக வளைத்து விடுங்கள். இது உங்கள் கண்களை உடனடியாக தூக்கிக் காட்டி, நீங்கள் விழிப்புடன் இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தரும். மஸ்காரா போடும்போது இமைகள் ஒட்டிக்கொள்ளாமல் அழகாக பிரிந்து காணப்பட இது ஒரு எளிய வழியாகும்.

ஐலைனருக்குப் பதில் ஐஷேடோ

ஐலைனர் பென்சில் அல்லது லிக்விட் ஐலைனர் கொண்டு கோடு போடுவது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஒரு கண் சரியாக வரும், மற்றொன்று சரியாக வராது. இதற்கு பதில், ஒரு சிறிய பிரஷ் கொண்டு கருப்பு அல்லது அடர் பழுப்பு நிற ஐஷேடோவை கண்ணின் இமை ஓரத்தில் தடவுங்கள்.

இது கண்களுக்கு ஒரு மென்மையான ‘ஸ்மோக்கி’ லுக் கொடுக்கும். தவறுதலாக பரவினாலும் அது அழகாகவே தெரியும் என்பதால், அவசரத்தில் இது ஒரு சிறந்த ஐடியாவாகும்.

இதையும் படிக்க :  பளிச்சிடும் அழகு வேண்டுமா; சில குறிப்புகள்!

விரல் நுனிகளால் பிளஷ் தடவுங்கள்

கன்னங்களில் பிளஷ் (Blush) தடவுவதற்கு எப்போதும் பிரஷ் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் விரல் நுனிகளிலேயே பிளஷ் எடுத்து மென்மையாக கன்னங்களில் தடவலாம்.

நம் விரல்களில் உள்ள இயற்கையான வெப்பம், அந்த பொருளை சருமத்தோடு சீராக கலக்கச் செய்யும். இதனால் கன்னங்கள் செயற்கையாக தெரியாமல், இயற்கையாகவே சிவந்து இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை மிக எளிதாகப் பெற்றுவிடலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்னால் அதே நிறத்தில் உள்ள லிப் லைனர் கொண்டு உதடுகளை சுற்றி கோடு வரைந்து கொள்ளுங்கள். இது லிப்ஸ்டிக் உதட்டை தாண்டி வெளியே பரவாமல் தடுக்கும்.

மேலும், லிப் லைனர் கொண்டு உதட்டின் உட்பகுதியிலும் லேசாக தீட்டிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் போட்டால், உணவு சாப்பிட்ட பிறகும் நிறம் மங்காமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். இது உங்கள் உதடுகளுக்கு ஒரு முழுமையான வடிவத்தைக் கொடுக்கும்.

நியூட்ரல் நிற ஐஷேடோக்கள்

அன்றாட பயன்பாட்டிற்குப் பிரகாசமான வண்ணங்களைத் தவிர்த்துவிட்டு, நியூட்ரல் (Neutral) நிறங்களான பிரவுன், பீஜ் அல்லது மென்மையான ரோஸ் நிறங்களை தேர்ந்தெடுங்கள். இந்த நிறங்கள் அனைத்து விதமான உடைகளுக்கும் பொருந்தும்.

மேலும், இவற்றைச் சரியாகப் பிளெண்ட் செய்ய அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஒரே ஒரு நிறத்தை எடுத்து இமைகளின் மேல் தடவினாலே போதும், முகம் ஒரு நேர்த்தியான தோற்றத்தை பெற்றுவிடும்.

மேக்கப் பொருட்களை அடுக்கி வையுங்கள்

எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது உங்கள் மேக்கப் பொருட்களை ஒழுங்காக வைத்திருப்பது. தினமும் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் ஒரு சிறிய பையில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறை கிளம்பும்போதும் மஸ்காரா எங்கே, லிப்ஸ்டிக் எங்கே என்று தேடுவதிலேயே பாதி நேரம் வீணாகும். தேவையானவற்றை மட்டும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருந்தால், பத்தே நிமிடத்தில் நீங்கள் மேக்கப் போட்டு முடித்துவிட்டு உற்சாகமாகக் கிளம்பலாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகேரளாவில் ரயில்வே விரிவாக்கத்திற்காக பழமையான தேவாலயம் இடமாற்றம்
Next Article காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

எடை குறைக்க வேண்டுமா? இந்தவொரு சீக்ரெட்டை தினமும் பின்பற்றுங்க!

March 23, 2026
ஃபிட்னஸ்

வெயில் காலமா இருந்தாலும் ஒரு நாளைக்கு இவ்வளவு இளநீர்தான் குடிக்கனும்.. மீறினால் பிரச்சனைதான்..!

March 23, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.