நீட் தேர்வு எழுத வந்த மனைவிகள் மோசமாக நடத்தப்படவில்லை என்று
தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
நீட் தேர்வு
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ௧௭ம் தேதி நாடு முழுவதும் நடந்து முடிந்தது. சுமார் 3,800 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மிகக் கடுமையான நெறிமுறைகளை தேர்வு முகமை பின்பற்றி வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தின் தேர்வு மையத்தில் தேர்வெழுத சென்ற மாணவிகளின் உள்ளாடையை கழட்ட சொல்லி பெண் அலுவலர்கள் கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகரளித்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் அந்த மையத்தில் இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று தேர்வு முகமை மறுத்துள்ளது.

