சமூகம்தமிழ்நாடு

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

மதுரை மாநகராட்சியின் தூய்மைப்பணியாளர்கள், பொறியியல் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

28 அம்ச கோரிக்கைகள்

மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், பொறியியல் பிரிவை சேர்ந்த சங்கங்களின் சார்பில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத் தொகை என்பது போன்ற 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

வேலை நிறத்தம்

இதன்படி மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பணிபுரியும் 6 ஆயிரம் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் முதல் கட்டமாக மதுரை தொழிலாளர் நலத்துறை மண்டல அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை

அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, மாநகராட்சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு போராட்டத்தை கைவிடுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதிலும் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை.

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடிப்படை பணிகள் பாதிப்பு

இதனையடுத்து மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் சுமார் 4,500 தூய்மை பணியாளர்கள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் குடிநீர் விநியோகம், குப்பைகளை அகற்றும் பணி, கழிவு நீர் அடைப்பு பணிகள் போன்ற அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது .

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் என்று 3 சங்கத்தினர் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts