சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவிவசாயம்

வைகை அணையில் உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை !

வைகை அணையில் உபரி நீர் திறப்பு திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர் மழையால்  வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts