அரசியல்தமிழ்நாடு

8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை – அமைச்சர் எ.வ.வேலு !

8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அரசாங்கம் தான் முடிவு எடுக்க முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அமைச்சர் எ.வ.வேலு

மதுரையில் கலைஞர் நினைவாக நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் பணிகள் குறித்து பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‘சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக கடந்த ஆட்சியின் போது விவசாயிகளை, பொதுமக்களை நேரில் அழைத்துப் பேசவேண்டும், மக்களின் குறைகளைத்தீர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் எட்டுவழிச்சாலை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசும் போது பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும் என்று தான் பேசினோம். நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை. சட்டமன்றத்தில் எட்டுவழிச்சாலை திட்டத்தில் பொதுமக்களுக்கு பிரச்சினைகள் உள்ளது விவசாயிகள் அழைத்து பேசுங்கள் என்றுதான் சொன்னோம். அது சட்டமன்ற குறிப்பில் உள்ளது. அதுபற்றி அமைச்சர் முடிவு எடுக்க முடியாது, அரசாங்கம் தான் முடிவு எடுக்க முடியும் என கூறியுள்ளார்.

Related posts