Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»கழுத்து கருமை முதல் கால் வீக்கம் வரை – சர்க்கரை நோய் இருப்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்தும் அறிகுறிகள்!

கழுத்து கருமை முதல் கால் வீக்கம் வரை – சர்க்கரை நோய் இருப்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்தும் அறிகுறிகள்!

February 20, 20263 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஒரு இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அது பல்வேறு சிக்னல்கள் மூலம் ஏதோ சரி இல்லை என்பதை தெரிவிக்கும். அதே போல் தான் நம் உடலும். ஆனால், நம்மில் பலர் அந்த சிக்னல்களை சாதாரணமானவை என்று அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

குறிப்பாக சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் முன், உடல் பல மாதங்களுக்கு முன்னரே அறிகுறிகளை காட்ட தொடங்கும். இந்த எச்சரிக்கைகளை முன்கூட்டியே கவனிப்பது, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இதயம் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் உதவும்.

சர்க்கரை நோய் இருப்பதை ரத்த பரிசோதனைகள் உறுதி செய்தாலும், நமது தோற்றத்திலும், உடல் அமைப்பிலும் ஏற்படும் மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான முதல் அறிகுறிகளாக அமைகின்றன. கழுத்தில் ஏற்படும் கருமை முதல் வயிற்றுப் பகுதிப் பருமனாவது வரை பல விஷயங்கள் இன்சுலின் செயல்பாட்டில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டுகின்றன.

இந்த அறிகுறிகளை சரியாகப் புரிந்துகொண்டு, ஆரம்பித்திலேயே அதற்காக நடவடிக்கைகளை எடுப்பது சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்கும். அந்த வகையில், உடலில் சர்க்கரை நோய் இருப்பதை மூன்கூட்டியே காட்டும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கழுத்து மற்றும் அக்குளில் படரும் கருமை: கழுத்து பகுதி, அக்குள் அல்லது தொடை இடுக்குகளில் தோல் திடீரென கருப்பாகவும் மாறுவது ‘அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்’ (Acanthosis Nigricans) என்று அழைக்கப்படுகிறது. உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் போது, அதிகப்படியான இன்சுலின் தோல் செல்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் தோல் நிறம் மாறி தடிமனாக தோன்றுகிறது. இது ப்ரீ-டயாபடீஸ் அல்லது டைப் 2 சர்க்கரை நோய்க்கான ஒரு மிக முக்கியமான ஆரம்பக்கால எச்சரிக்கை அறிகுறியாகும்.

உடலில் திடீரெனத் தோன்றும் மருக்கள்: கழுத்து, அக்குள் அல்லது கண் இமைகளில் சிறிய மென்மையான சதை அல்லது மருக்கள் திடீரென அதிகமாக தோன்றினால் கவனமாக இருக்க வேண்டும். இவை பொதுவாக பாதிப்பற்றவை என்று கருதப்பட்டாலும், உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருப்பதற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாதபோது, இந்த மருக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். எனவே, திடீரெனப் பல மருக்கள் உருவாவது சர்க்கரை நோயின் தொடக்கமாக இருக்கலாம்.

இதையும் படிக்க :  மலச்சிக்கல்! - மருத்துவ உலகம் சொல்லும் ஆபத்துகளும் தீர்வுகளும்

உயரத்திற்கு மீறிய இடுப்புச் சுற்றளவு: ஒருவரின் இடுப்பு சுற்றளவு அவரது உயரத்தில் பாதியை விட அதிகமாக இருக்கக்கூடாது. உதாரணமாக, நீங்கள் 160 செ.மீ உயரம் என்றால், உங்கள் இடுப்பு 80 செ.மீ-க்கு மேல் இருக்கக்கூடாது.

இடுப்புப் பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, உட்புற உறுப்புகளைச் சுற்றிப் படிந்து (Visceral Fat), இன்சுலின் சரியாக வேலை செய்யவிடாமல் தடுக்கிறது. இது வளர்சிதை மாற்றக் குறைபாடுகளையும், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பையும் பல மடங்கு அதிகரிக்கிறது.

கல்லு போன்ற கடினமான வயிறு: வயிறு மென்மையாக இல்லாமல், தொட்டால் மிகவும் கடினமாகவும் கல்லுப் போலவும் இருந்தால் அது ஆபத்தான அறிகுறியாகும். இது வெறும் தசை அல்ல, மாறாக உங்கள் உட்புற உறுப்புகளுக்கு இடையில் படிந்துள்ள அடர்த்தியான ‘விசரல் ஃபேட்’ (Visceral Fat) ஆகும்.

இத்தகைய கடினமான வயிறு கொண்டவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சீராக இருந்தாலும், அது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். இது சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களுக்கு நேரடி அழைப்பாக அமைகிறது.

கால்களில் ஏற்படும் வீக்கம்: உங்கள் பாதங்கள் அல்லது கணுக்கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, அது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கக்கூடும். இதனால் உடலில் நீர் தேங்கி (Fluid Retention), கால்களில் வீக்கம் உண்டாகும்.

இதையும் படிக்க :  கண்களே சற்று ஓய்வெடுங்கள்: உடல்நலத்திற்கான சில குறிப்புகள் இதோ...

நீண்ட நேரம் நின்றாலோ அல்லது உட்கார்ந்தாலோ ஏற்படும் சாதாரண வீக்கத்தை விட, அடிக்கடி மற்றும் காரணமில்லாமல் வரும் வீக்கம் ரத்தச் சர்க்கரை மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை சோதிக்க வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.

குறையாத ரத்த அழுத்தம்: சர்க்கரை நோய் உள்ள பலருக்கு உயர் ரத்த அழுத்தமும் (High Blood Pressure) ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகமாகும் போது, அது ரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது.

இதனால் இதயம் அதிக ஆற்றலுடன் ரத்தத்தை உந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை இருந்தும் உங்கள் ரத்த அழுத்தம் குறையாமல் இருந்தால், அது உங்கள் உடலில் சர்க்கரை நோய் மறைந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

கழுத்தைச் சுற்றிச் சேரும் தடிமனான கொழுப்பு: உடல் எடையைத் தவிர்த்து, கழுத்துப் பகுதி மட்டும் திடீரென தடிமனாகவோ அல்லது சதைப்பற்றுடன் ‘பிளாபி’ (Flabby) ஆகவோ மாறினால் அது ஒரு எச்சரிக்கைதான். கழுத்தைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்புத் திறனுடன் நேரடியாகத் தொடர்புடையது. இது மெட்டபாலிக் சிண்ட்ரோம் எனப்படும் வளர்சிதை மாற்றச் சிக்கல்களை உருவாக்கி, டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மிக விரைவாக அதிகப்படுத்துகிறது.

கழுத்தின் பின்புறம் ஏற்படும் தசைத் திமில்: கழுத்தின் பின்புறம், அதாவது தோள்பட்டைக்கு சற்று மேலே ஒரு சிறிய கொழுப்புத் திமில் (Buffalo Hump) போன்று உருவானால், அது ஹார்மோன் சமநிலையின்மையைக் குறிக்கிறது.

இது உடலில் இன்சுலின் அளவை நேரடியாகப் பாதிக்கும். ‘குஷிங் சிண்ட்ரோம்’ (Cushing’s Syndrome) போன்ற நோய்களின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். இத்தகைய தசைத் திமில் தோன்றுவது ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி உயர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகொழுப்பை கரைக்க முடியாமல் போராடுறீங்களா? இந்த உணவுகளை சாப்பிட ஆரம்பிங்க!
Next Article டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் சட்டைகளை கழற்றி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
மருத்துவம்

“புரத உட்கொள்ளலை குறைப்பது கல்லீரல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம்” – யாருக்கெல்லாம் பொருந்தும்?

March 24, 2026
உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.