அழகுக்குறிப்புகள்மருத்துவம்

எந்த சருமத்திற்கு எந்தெந்த சோப்பு பயன்படுத்தவேண்டும் – விரிவான ஒரு கட்டுரை!

நாம் தினமும் பயன்படுத்தும் பொருள் சோப்பு. தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை கூட பயன்படுத்துகிறோம். அரிதாக சிலர்தான் கடலை மாவு மாதிரியான குளியல் பொடியை பயன்படுத்துகிறார்கள்.

வறட்சியான சருமம்

சீபம் என்கிற சுரப்பு முகத்திற்கு தேவையான அளவு எண்ணெய் பசை சுரக்க உதவும். நமது சருமம் அதிகமாக வறண்டு இருந்தால் சீபத்தில் எண்ணெய் சுரப்பு குறைவாக இருக்கும். இதுபோன்ற வறட்சியான சருமம் கொண்டவர்கள் கிளிசரின் சேர்க்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்தலாம்.

ஆட்டுப்பால் கலந்த சோப்புகளும் தற்போது கிடைக்கிறது. ஆட்டுப்பால் கிடைப்பதே சிரமம் எனும் போது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட சோப்புகள் வறண்ட சருமத்துக்கு மிகவும் உதவும்.

உணர்திறன் வாய்ந்த சருமம்

உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்களுக்கு என்றே தனித்துவமான சோப்புகள் மருந்து கடைகளில் கிடைக்கும். இவர்கள் கலர் மற்றும் வாசனை இல்லாத சோப்புகளை பயன்படுத்தலாம். சரும மருத்துவரின் ஆலோசனையோடு இந்த சோப்புகளை வாங்கி பயன்படுத்தவும்.

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்களுக்கு ஆன்டி பாக்டீரியல் சோப்பு வகைகள் பயன்படுத்தலாம். குறிப்பாக வேப்பிலை, சாலிசிலிக் அமிலம் இருக்கும் சோப்பு வகைகள் சருமத்தில் எண்ணெய் பசையை போக்கும். அதிகமான எண்ணெய்பசை சருமம் கொண்டவர்கள் தங்கள் சருமத்துளைகளில் அடைப்பு இருப்பதை பார்க்கலாம். இதனால் முகம் மந்தமாக இருக்கும். இவர்கள் லாவெண்டர் மற்றும் டீ ட்ரீ ஆயில் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். இவர்கள் சோப்புக்கு மாற்றாக ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம்.

மூலிகை சோப்பு

தற்போது கடைகளில் ஹேண்ட்மேட் சோப்புகள் கிடைக்கிறது. ஜெல் கலக்காமல் வீட்டில் தயாரிக்க கூடிய இந்த வகை சோப்பில் தேங்காயெண்ணெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது சருமத்துக்கு மிக மிக நல்லது.

தழும்புகள் நீக்க

வைட்டமின் நிறைந்த சோப்புகளும் பிரத்யேகமாக கிடைக்கிறது. வைட்டமின் ஏ சருமத்தில் இருக்கும் தழும்பை நீக்கவும் , வைட்டமின் பி அதிக மந்தமாக இருக்கும் சருமத்துக்கும் உதவுகிறது.

ஸ்க்ரப் சோப்பு

ஸ்க்ரப் சோப் தற்போது கிடைக்கிறது. இயற்கை பொருளை பயன்படுத்தி தயாரிக்கும் இந்த சோப்பு வகைகளை உடலுக்கு தேய்த்துகுளிக்கலாம். இது இறந்த செல்களை நீக்கும். ஆனால் இதை முகத்துக்கு பயன்படுத்தக்கூடியது.

பாதுகாப்பான சோப்பு என்பது அதிக வாசனை இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் இது சருமத்துக்கு எரிச்சலை உண்டாக்கலாம். சோப்பு வாங்கும் போது அதிக வாசனை இல்லாமல் இருக்கும் சோப்பை வாங்கி பயன்படுத்துங்கள்.

சோப்புகளின் கலர் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று பார்த்து வாங்ககூடாது. இயற்கையான நிறத்தில் அல்லது லேசான நிறத்தில் இருப்பதை மட்டும் பார்த்து வாங்குங்கள். அடர்த்தியான நிறம் கொண்ட சோப்புகளை தவிர்ப்பது நல்லது. கலர் வேண்டுமெனில் பர்பெர்ரி, அதிமதுரம் சேர்த்த இயற்கை நிறங்கள் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் கரும்புள்ளியை போக்க செய்யும்.

Related posts