Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை விபரீத முடிவு- மகளும் சோக முடிவு

திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை விபரீத முடிவு- மகளும் சோக முடிவு

March 10, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னை வடபழனியில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை உயிரை மாய்த்துக் கொண்டார். தந்தை இறந்த துக்கம் தாளாமல் மகளும் விபரீத முடிவை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் பிருந்தாவுக்கு திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் பாக்கியா(30) திருமணம் ஆகாமல் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இளைய மகள் பாக்கியாவுக்கு 30 வயது ஆகியும் திருமணம் ஆகாததால் தந்தை கிருஷ்ணகுமார் நீண்ட நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணகுமார், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் மனைவியும், மகளும் அவரை பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் தாயும் மகளும் சோகத்துடன் வீட்டிற்கு திரும்பினர்.

இதையும் படிக்க :  ஈசிஆரில் கணவர், மனைவி கொடூர கொலை: பட்டப்பகலில் பயங்கரம்

மறுநாள் இரவு, அதாவது 8 ஆம் தேதி கிருஷ்ணகுமாரின் மனைவி வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தபோது அங்குள்ள பாழடைந்த கிணற்றின்‌ மீது கிருஷ்ணகுமாரின் செல்போன் இருப்பதை கண்டு தன் மகளிடம் தெரிவித்துள்ளார்.

உடனே மகள் பாக்கியா ஓடிவந்து பார்த்த போது கிணற்றில் தந்தை உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அம்மாவை வீட்டிற்குள் அழைத்து சென்று அவரை அறையில் வைத்து பூட்டி விட்டு சமையலறையில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

பின்னர் பாக்கியாவின் தாய், தனது மூத்த மகள் பிருந்தாவுக்கு போன் செய்து நடந்தவற்றை கூற, பிருந்தா தன் கணவர் வம்சியுடன் தாயார் வீட்டிற்கு வந்து அறையை திறந்து அம்மாவை மீட்டுள்ளார். பின்னர் பாக்கியாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்‌.

இதையும் படிக்க :  சிறுவனுக்கு அரிவாள் வெட்டு- காவல் துறையினர் விசாரணை

பின்னர், பிருந்தாவின் கணவர் வம்சி, காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த வடபழனி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து கிருஷ்ணகுமார் உடலை மீட்டனர். பின்னர் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரன் உடல்களையும் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மகளுக்கு 30 வயது ஆகியும் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை விபரீத முடிவை எடுத்ததும், தந்தை இறந்த துக்கம் தாளாமல் மகளும் உயிரை மாய்த்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை பல்லாவரம் அருகே இரட்டைக் கொலை
Next Article தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.