Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல்

தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல்

March 10, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவரை அரிவாளால் வெட்டிய கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள உதய மார்த்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவர் நேற்று (மார்ச் 08) மாலை தாமிரபரணி ஆற்றின் கரையில் குளித்துக் கொண்டிருந்தார். மறுகரையில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் எப்படி எங்கள் பகுதியில் வந்து குளிக்கலாம் என்று கூறி அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இளைஞர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு விரட்டியுள்ளனர். இதைப் பார்த்த முதியவர் முருகன் அவர்களைத் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் முருகனை‌ அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. பின்னர் ஊருக்குள் சென்று தெருவோரம் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிழித்தெறிந்து அந்த கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க :  சென்னை அரும்பாக்கத்தில் தாய், மகளை கத்திமுனையில் மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை

தகவலின் பேரில் சேரன்மகாதேவி காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் முருகனை வெட்டியது 3 பேர் கொண்ட கும்பல் என்பதும், அவர்கள் அனைவரும் 18 வயதை நிரம்பாத சிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காயமடைந்த முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பது குறித்து அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க :  அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 7 மணிநேரத்தில் மீட்பு - பெண் திடுக்கிடும் வாக்குமூலம்

மேலும், முருகன் திட்டமிட்டு அரிவாளால் வெட்டப்பட்டாரா? (அல்லது) வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி லருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை விபரீத முடிவு- மகளும் சோக முடிவு
Next Article எட்டயபுரம் ஆலையில் தீ விபத்து: ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.