Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»127 திருட்டு சம்பவங்களை செய்த கில்லாடி திருடன்:7 நாட்களில் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

127 திருட்டு சம்பவங்களை செய்த கில்லாடி திருடன்:7 நாட்களில் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

March 14, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

127 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கில்லாடி திருடன் ஏழே நாட்களில் திருவாரூர் போலீசாரிடம் வசமாக சிக்கினார்.

திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பனகல் சாலையில் ஹாஜி முகமது (54) என்பவர் ஹாஜி சூப்பர் மார்க்கெட் என்கிற பெயரில் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28 ஆம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு மறுநாள் காலை வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது, சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டர் திறக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் இருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் பணம் திருடு போய் இருந்ததை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒரு மர்ம நபர் மங்கி குல்லா அணிந்து கொண்டு கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் கடையின் வெளிப்பக்கம் இருந்த சிசிடிவி கேமராவை வேறு பக்கம் திருப்பி வைத்து கடைக்குள் சென்று அவர் பணத்தை திருடியதும் சிசிடிவி காட்சிகளில் அம்பலமானது.

கைரேகை நிபுணர், மோப்பநாய் உதவியுடன் போலீசார் மர்ம நபர் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் திருவாரூர் தாலுகா உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட தனிப்படையினர் இந்த வழக்கில் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிக்க :  கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி !

இந்த விசாரணையில் சூப்பர் மார்க்கெட்டில் பதிவான சிசிடிவி காட்சி மற்றும் திருவாரூர் நகர் பகுதியில் பதிவான மற்ற சிசிடிவி காட்சிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் என பல சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது ஒரு இடத்தில் இவர் கண் வரை மறைக்கும் பனிக் குல்லா அணிந்திருந்த நிலையில் அவரது மூக்கு மற்றும் தாடை பகுதியை வைத்து தனிப்படையினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள குற்றப்பிரிவிற்கு இந்த புகைப்படத்தை அனுப்பினர்.

அப்போது ஏற்கனவே அவர்களிடம் இருந்த புகைப்படத்துடன் இந்த புகைப்படம் பொருந்தி உள்ளது. இதனையடுத்து அந்த புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் திருவாரூர் ரயில் நிலையத்தில் அந்த நபர் இருந்ததை கண்டு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுவரை தமிழக முழுவதும் கடந்த 1993- ல் இருந்து இவர் மீது சென்னை, மதுரை, கரூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 127 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிக்க :  புழல் சிறை கைதி 'திடீர்' மரணம்: போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும் சிவகங்கை மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் வசித்து வரும் காளிதாஸ் (59) என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இவர் காவலாளி உடையான காக்கி பேண்ட் – சட்டை அணிந்து சென்று திருடுவதையும் யாரேனும் வந்தால் வாட்ச்மேன் போல் நின்று விட்டு மீண்டும் திருட்டில் ஈடுபடுவதையும் உடைக்கும் பூட்டை கையோடு எடுத்துச் செல்வதையும் தனது வழக்கமாகக் கொண்டுள்ளதும் தெரியவந்தது.

மேலும் திருடிய பணத்தில் இவர் பெண்களுடன் தினந்தோறும் உல்லாசமாக இருந்து வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை இவர் திருட்டு வழக்குகளில் காவல்துறையிடம் அதிகம் பிடிபட்டதில்லை என்பதும் இவர் செல்ஃபோன் ஏதும் பயன்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருவாரூர் ஹாஜி சூப்பர் மார்க்கெட்டில் காக்கி சட்டை அணிந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இவர் திருடியதாகவும் அந்த பணத்தை உல்லாசமாக செலவழித்ததாகவும் போலீஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். இதனையடுத்து நகர காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமே 31-க்குள் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்… தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை
Next Article விரைவில் விடுதலையாகிறார் சோனம் வாங்சுக்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.