விளாத்திகுளத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தென்னை மரத்தில் தீ
கடந்த ஒரு வரகளமாக தமிழகம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில், விளாத்திகுளம் ஹைஸ்கூல் ரோடு தெருவில் உள்ள பாலமுருகன் என்பவரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தீப்பிடித்தது. இது குறித்து விளாத்திகுளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தென்னை மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் விளாத்திகுளம் நகர பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

