பா.ஜ.க சூர்யா சிவா மீது தி.மு.க. சார்பில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புகார் மனு
பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவின் மாநில செயலாளர் சூர்யா சிவா அமைச்சர் கே.என்.நேரு மீதும் அவருடைய சகோதரர் மறைந்த கே.என்.ராமஜெயம் மீதும் அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பரப்புவதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் மத்திய மண்டல காவல் துறை தலைவரிடம் புகார் மனு அளித்தனர். அதில், சூர்யா சிவா பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி இருக்கிறார் எனவே சூர்யா சிவாவை கைது செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

