இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து கமல் இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் விபத்து காரணமாக பல வருடங்களாக இந்தியன் 2 முடங்கி இருக்கிறது. இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் படம் எடுக்க சென்றுவிட்டார்.
கதாநாயகி
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் விலகி விட்டதால் அவருக்கு பதிலாக ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேவிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

