Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, September 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தஞ்சாவூரை சேர்ந்த நபர் கைது

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தஞ்சாவூரை சேர்ந்த நபர் கைது

March 26, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களாக அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் விபிஎன் (VPN) பயன்படுத்தி வெளிநாட்டு முகவரியில் இருந்து அனுப்பப்படுவதால், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த குண்டுகள் இன்னும் சில மணி நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதையும் படிக்க :  கொலுவுடன் தொடங்கியது நவராத்திரி விழா

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், தங்களுக்கு கிடைத்த அழைப்பு குறித்து சென்னை விமான நிலைய காவல்துறையினருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த சோதனையின் முடிவில் வெடிப்பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால், இந்த மிரட்டலும் வழக்கமாக வரும் புரளி என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு, தஞ்சாவூர் மாவட்டம், திருவுடை மருதூர் பகுதியில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும், அதே பகுதியைச் சேர்ந்த நிசார் அகமது (33) என்பவர் இந்த மிரட்டல் விடுத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிக்க :  உணர் திறனறிவு எனப்படும் Emotional Intelligence பற்றித் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய தனிபடை காவல்துறையினர், திருவிடை மருதூர்க்கு சென்று நிசார் அகமது கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அதற்கான உரிய மருத்துவச் சான்றிதழ்களையும் அவரது உறவினர்கள் காவல்துறையினரிடத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கொடூர தந்தை: தெலங்கானாவில் அதிர்ச்சி
Next Article 2வது நாளாக அதிகரித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்வு

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.