செங்கல்பட்டு தொழுப்பேடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலி.
செங்கல்பட்டு
சென்னையில் இருந்து கடலூர் சிதம்பரம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் சென்ற போது சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதில், பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயமடைந்த 18ம் மேற்பட்ட பயணிகள் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனைகளுக்கு முதல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரங்கள் குறித்து சேகரித்து வருகின்றனர்.

