முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டிருப்பதற்கு, எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர்
நியாய விலை கடைகளுக்கு பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களை கொள்முதல் செய்ததில் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்தாக புகார்கள் எழுந்தது . இந்நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 58 கோடியே 44 லட்ச ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து காமராஜ் மற்றும் அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இபிஎஸ் கண்டனம்
இதனிடையே இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது’ என்று இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

