புதிய படம்
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இதனைத்தொடர்ந்து இவரின் நடிப்பில் ‘மெடிக்கல் மிராக்கல்’, ‘பூமர் அங்கிள்’, ‘பொம்மை நாயகி’ உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் யோகி பாபு புதிய படம் ஒன்றிற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். ‘வில் அம்பு’ படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியன் இப்படத்தை இயக்குகிறார். அண்மையில் இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
— Yogi Babu (@iYogiBabu) October 3, 2022

