விக்ரம் படம்
சீயான் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் கோப்ரா. ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனைத்தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கதில், நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது.
ரிலீஸ் அறிவிப்பு
இந்நிலயில், கவுதம் மேனன் இயக்கதில், விக்ரம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தை 2018-ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டது. ஆனால் சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. இந்நிலயில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

