தமிழ்நாடுவணிகம்

காசிமேட்டில் ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு மீன் விற்பனை!

காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் நேற்று மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது.

மீன்கள் ஏற்றுமதி

காசிமேட்டில் இருந்து வெளி நாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் காசிமேடு மீன்களுக்கு எப்போதும் தனி மதிப்புண்டு. குறிப்பாக வெள்ளை வவ்வால், டைகர் இறால் போன்ற மீன்களுக்கு வெளி நாட்டில் தனி மவுசு உண்டு. மேலும், இங்கிருந்து கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மீன் விற்பனை

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 150-ல் இருந்து 200 டன் வரை நேற்று மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதலே மீன் வாங்க பொதுமக்கள், காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் குவிந்தனர். இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு மீன்கள் விற்பனையாகி உள்ளது

Related posts