ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையின் காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
மாமல்லபுரம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா பகுதியாக திகழ்வதால் நாள்தோறும் வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தொடர் விடுமுறை என்பதாலும் நேற்று ஞாயிற்றுகிழமை என்பதாலும் நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதின.
வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம் ஆகிய பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

