சினிமாவெள்ளித்திரை

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல் – வைரலாகும் புகைப்படம்!

படப்பிடிப்பு தளம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்த்தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ராகுல் பிரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்கா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெளியிட்டார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Related posts