இசைஞானி இளையராஜாவிற்கு கிடைத்திருக்கும் எம்.பி பதவி தமிழ் மண்ணிற்கும் கிடைத்த பெருமை என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.
எல். முருகன்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் புதுச்சேரி சென்றுள்ளார். அங்கு கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் எல்.முருகன். இதன்தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி தூய்மை இந்தியா நிகழ்ச்சி புதுச்சேரியின் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இளையராஜா பெருமை
அப்போது அவர் பேசுகையில், ‘இளையராஜா ஒரு இசை மாமேதை அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இது அவரது திறமைக்கும், சாதனைக்கும் கிடைத்த பெரும் அங்கீகாரம். மேலும், இசைஞானி இளையராஜா இசையால் இந்த உலகை கட்டிப்போட்டவர். இளையராஜாவுக்கு எம்பி பதவி கிடைத்திருப்பது தமிழ் நாட்டிற்க்கும், தமிழ் மண்ணிற்கும் கிடைத்த பெருமை’ என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பெருமிதம் கொண்டார்.

