சென்னையில் காணாமல் போன சாலையை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சாலையை கண்டுபிடித்து தாருங்கள்
கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் குமார் (54). இவர், கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூரில் பகுதியில் உள்ள, சீனிவாசபுரம் – கண்டிகை சாலைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளித்துள்ளார். அதற்கு அம்பத்தூர் சார்பொறியாளர் சார்பில் பதில் மனு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அந்த சாலைகள் கடந்த பிப்ரவரி மாதம் சீரமைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. போடாத சாலையை போட்டதாக கூறி மாநகராட்சி தரப்பில் வந்த பதியில் கடிதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எனவே, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவைகளை ஆய்வு செய்து காணாமல் போன அந்த சாலையை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என புகாரில் கூறப்பட்டிருந்தது. இதுபற்றி மாநகராட்சி அலுவலகத்தில் விவரம் கேட்டு கொள்ளும்படி கூறி குமாரை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

