சமூகம்பயணம்

வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு!

ஆய்வு பணிகள் 

மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வந்தார். காலை 10.30 மணியளவில் சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது ஆய்வு பணிகளை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து மெட்ரோ ரயில் மூலம் ஆலந்தூர் வரை பயணம் செய்தார். அப்போது பயணிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

இந்த சம்பவத்தின் போது மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக், மற்றும் அதிகாரிகள் அர்ஜூன் அசோக்குமார், ஜெயராம் மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கரு நாகராஜன், காளிதாஸ் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts