அரசியல்இந்தியாதமிழ்நாடு

அதிமுக எடப்பாடி பழனிசாமியுடன் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு !

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்துள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தல் 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தெடுப்பதற்கான பணிகள் முழுவீச்சியில் நடந்து வருகிறது. எதிர்க்கட்சியில் மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டதில் யஷ்வந்த் சின்ஹாவை குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்வு செய்து அறிவித்தனர்.

யஷ்வந்த் சின்ஹா

பாஜக வேட்பாளர்

மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒடிசா மாநிலத்தை சார்ந்த பழங்குடி பெண்ணான திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தனர். அவர், 20 ஜூன் 1958-ல் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிராஞ்சி நாராயண். இவர் சந்தல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.ஆகஸ்ட் 6, 2002 முதல் மே 16, 2004 வரை மாநில அமைச்சராக இருந்தார்.

திரௌபதி முர்மு

மேலும், முன்னாள் ஒடிசா அமைச்சராகவும், 2000 மற்றும் 2004ம் ஆண்டுகளில் ரைரங்க்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர். இதனையடுத்து, பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் பா.ஜ.க கட்சி ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பா.ம.க அறிவித்துள்ளது.

திரௌபதி முர்மு

ஆதரவு

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும் , அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி நேரில் சந்தித்துள்ளார். குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை வைத்தனர். அந்தச் சந்திப்பின்போது, தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, முன்னாள்‌ அமைச்சர்கள்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌.

Related posts